Homeசெய்திகள்தமிழ்நாடுடாஸ்மாக்கில் ரூ.2,000 நோட்டுக்கள் செல்லும்- அமைச்சர் செந்தில் பாலாஜி

டாஸ்மாக்கில் ரூ.2,000 நோட்டுக்கள் செல்லும்- அமைச்சர் செந்தில் பாலாஜி

-

- Advertisement -

டாஸ்மாக்கில் ரூ.2,000 நோட்டுக்கள் செல்லும்- அமைச்சர் செந்தில் பாலாஜி

இன்று முதல் டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 நோட்டுக்களை வாங்கக்கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் கூறியதாக வெளியான செய்தி முற்றிலும் தவறு என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

Tasmac rs 2000

எக்காரணத்தை கொண்டு இன்று முதல் ரூ.2,000 நோட்டுகளை வாங்கக்கூடாது என கடை ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாகவும், ரூ.2,000 நோட்டுகளை வாங்கினால் சம்பந்தப்பட்ட கடை மேற்பார்வையாளார் மற்றும் விற்பனையாளர் பொறுப்பில் தீர்வு காண வேண்டும் எனவும் செய்தி வெளியானது. அதுமட்டுமின்றி, மதுப்பிரியர்கள் தொந்தரவு செய்தால் வங்கியில் மாற்றிக்கொள்ள அறிவுறுத்த வேண்டுமென டாஸ்மாக் நிர்வாகம் கடை ஊழியர்களுக்கு உத்தரவிட்டிருந்ததாக தகவல் பரவியது.

இந்த தகவலை முற்றிலும் மறுத்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்று முதல் டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 நோட்டுக்களை வாங்கக்கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் கூறியதாக வெளியான செய்தி முற்றிலும் தவறு எனக் கூறியுள்ளார். மேலும் அப்படி ஒரு சுற்றறிக்கை டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பப்படவில்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

 

MUST READ