spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை தரணி போற்றும் வகையில் தலை நிமிர செய்தவர் கலைஞர் - உதயநிதி!

தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை தரணி போற்றும் வகையில் தலை நிமிர செய்தவர் கலைஞர் – உதயநிதி!

-

- Advertisement -

தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டைத் தரணி போற்றும் வகையில் தலை நிமிரச் செய்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பெரியாரின் கனவுகளுக்கும், அண்ணாவின் குறிக்கோள்களுக்கும் தன்னுடைய சட்ட-திட்டங்கள் மூலம் செயல்வடிவமளித்து, தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டைத் தரணி போற்றும் வகையில் தலை நிமிரச் செய்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அத்தகைய கலைஞரின் நூற்றாண்டு நிறைவில் இருக்கிறோம்.

எழுதி, பேசி, தமிழ்நாடு முழுக்க நடையாய் நடந்து, ‘ஓய்வெடுக்காமல் உழைத்த’ கலைஞர் அவர்களின் நூற்றாண்டை, நம்முடைய கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், அரசு மற்றும் கழகத்தின் சார்பாக #கலைஞர்100 என்ற புகழ் பரப்பும் பெரு விழாவாக ஆண்டு முழுக்க நடத்தியிருக்கிறார். இந்த ஒரு நூற்றாண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் செய்த சாதனைகள் அனைத்தும் காலத்தை வென்று, இன்னும் பல நூறாண்டுகள் கடந்தும் மக்கள் மனதில் நிரந்தரமாக நிலைத்து நிற்கும். கலைஞர் வாழ்க…அவர் புகழ் ஓங்குக! என குறிப்பிட்டுள்ளார்.

 

MUST READ