spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபா.ஜ.க.வின் பிளவுவாத கனவுகள் ஒருபோதும் பலிக்காது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!

பா.ஜ.க.வின் பிளவுவாத கனவுகள் ஒருபோதும் பலிக்காது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!

-

- Advertisement -

"பா.ஜ.க.வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை!

பிரதமர் மோடி உண்மைகளை மறைத்து விடியல் பயண திட்டத்தின் மீது வீண்பழி சுமத்தி இருக்கிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தோல்வி பயம் என்ன செய்யும்? பிரதமர் என்ற உயர்பொறுப்பில் இருந்துகொண்டே ஒரு மாநில அரசின் மக்கள்நலத் திட்டத்தின் வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தூற்றச் செய்யும். இந்தியர்கள் அனைவருக்கும் தான் பொதுவானவர் – பிரதமர் என்பதையே மறந்து மாநிலங்களுக்கு இடையே மோதலையும் வெறுப்பையும் தூண்டச் செய்யும். ஜூன்-4 இந்தப் பொய்கள் உடைபடும்! வெறுப்பு அகலும்! #INDIA வெல்லும்.

பத்தாண்டுகால சாதனைகள் என்று ஏதும் இல்லாததால், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்களைக் கொச்சைப்படுத்தத் துணிந்திருக்கிறார் பிரதமர் மோடி. கோடிக்கணக்கான பெண்களுக்கு நாள்தோறும் நன்மை தந்து வரும் விடியல் பயணத் திட்டத்தைப் பகிரங்கமாக எதிர்க்கிறார். ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்திட்டு அறிமுகப்படுத்திய திட்டம் பயணச் சுதந்திரத்தைத் தந்ததோடு, பெண்களுக்குப் பலவகைகளிலும் ஏற்றத்தை அளித்திருக்கிறது.

முதலமைச்சர் இரங்கல்

பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணத்தால் மெட்ரோ ரயில்களில் கூட்டமில்லை எனப் புதுப்புரளி கிளப்பி இருக்கிறார். 2019-இல் 3 கோடியே 28 லட்சம் பயணங்கள் என்றிருந்த சென்னை மெட்ரோ பயணங்கள், 2023-இல் 9 கோடியே 11 லட்சமாக உயர்ந்திருக்கிறதே தவிர குறையவில்லை. சென்னை மெட்ரோ இரண்டாம்கட்ட விரிவாக்கத்துக்கு, நிதி தராமல் அத்திட்டத்தையே முடக்கிய பிரதமர் மோடி, உண்மைகளை மறைத்து, விடியல் பயணத் திட்டத்தின்மீது வீண்பழி சுமத்தி இருக்கிறார். பிற்போக்குத்தனமான வலதுசாரி சிந்தனைகள் கொண்ட ஆர்.எஸ்.எஸ் பின்புலத்திலிருந்து வந்தவர் என்பதால் பெண்களின் முன்னேற்றம் கண்டு அஞ்சுகிறார். பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! பொய்மை உடைபட்டு, வெறுப்பு அகலும்! இந்தியா வெல்லும்! என குறிப்பிட்டுள்ளார்.

MUST READ