Homeசெய்திகள்தமிழ்நாடுமயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை திறந்து வைத்து, மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ரூ.655 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (4.3.2024) மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தலில் நடைபெற்ற அரசு விழாவில், 114 கோடியே 48 இலட்சம் ரூபாய் செலவில் மயிலாடுதுறையில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 308 கோடியே 88 இலட்சம் ரூபாய் செலவில் 70 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 88 கோடியே 62 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 40 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் 12,653 பயனாளிகளுக்கு 143 கோடியே 46 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை திறந்து வைத்தல் மயிலாடுதுறை, மன்னம்பந்தலில் தரைத்தளம் மற்றும் ஏழு தளங்களுடன் 2,82,883 சதுர அடி பரப்பளவில் 114 கோடியே 48 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.

MUST READ