spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

-

- Advertisement -

பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

we-r-hiring

கடந்த மே 17-ம் தேதி தொடங்கிய பாரா ஒலிம்பிக் போட்டிகள் மே 25-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா சார்பில் ஏராளமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு 1.88 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்..இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகள் அடிப்படையில் இந்தியா நான்கு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலம் என மொத்தம் பத்து பதக்கங்களுடன் புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், உலக பாரா தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “ஜப்பானின் கோபியில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் உயரம் தாண்டுதலில் டி63 போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு வாழ்த்துகள். வருங்காலத்தில் இன்னும் பெரிய உயரங்களை எட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

 

MUST READ