Homeசெய்திகள்தமிழ்நாடு80% வாக்குறுதிகள் நிறைவேற்றம்; மீதம் உள்ள வாக்குறுதிகளையும் ஓராண்டில் நிறைவேற்றுவோம்- மு.க.ஸ்டாலின்

80% வாக்குறுதிகள் நிறைவேற்றம்; மீதம் உள்ள வாக்குறுதிகளையும் ஓராண்டில் நிறைவேற்றுவோம்- மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்உங்களில் ஒருவன் பதில்கள்” தொடரில் கேள்விகளுக்கு பல்வேறு சுவாரஸ்யமான பதில்களை அளித்துள்ளார்.

mkstalin

we-r-hiring

அண்மையில் உங்களை நெகிழ வைத்த மனிதர் அல்லது சம்பவம் ஏதாவது இருக்கிறதா? என கேட்கப்பட்ட கேள்விக்கு, சிறைக் கைதிகள் படிக்கின்ற வகையில் சிறைச்சாலைகளில் நூலகம் அமைக்கும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இதற்காகச் சிறைத்துறைக்குப் பலரும் ஆர்வத்தோடு புத்தகங்களை வழங்கி வருகிறார்கள். இராமநாதபுரத்தைச் சேர்ந்த பெரியவர் – 92 வயதான பாலகிருஷ்ணன் அவர்கள், தனது சேகரிப்பில் இருந்த 300 புத்தகங்களையும் சிறைத்துறைக்கு வழங்கி இருக்கிறார். தன் வாழ்நாளெல்லாம் சேகரித்த புத்தகங்களில் ஒரு பகுதியை சிறைக்கைதிகள் பயன்பெற வேண்டும் என்று கொடுத்திருக்கும் அவரது முடிவு மிகவும் பாராட்டத்தக்கது.

உண்மையிலேயே இந்தச் செய்தியைப் பாத்து நெகிழ்ந்து போனேன். இதைப் பலரும் பின்பற்ற வேண்டும். மிசாவில் அரசியல் கைதியாக நான் இருந்தபோது, நிறைய புத்தங்களைப் படிக்கும் வாய்ப்பு சிறைச்சாலையில் கிடைத்தது. அரசியல், வரலாற்று புத்தகங்களை தாண்டி நிறைய நாவல்களையும் படித்தேன். சிறைச்சாலைத் தனிமையைப் போக்க நல்ல நண்பன் புத்தகங்கள்தான் என பதில் அளித்துள்ளார்.

இதேபோல் பொய் வாக்குறுதிகளைக் கொடுத்துதான், திமுக ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டது என்று, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருக்கிறாரே? என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடியில் போராடுடியவர்களைத் துப்பாக்கியால் சுடச் சொல்லிவிட்டு, ‘டிவியைப் பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டேன்’ என்று பொய் சொன்னாரே அந்த பழனிசாமியா? அவர் அப்படித்தான் பேசுவார்! அளித்த வாக்குறுதிகளில் 85 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டி இருக்கிறோம். சொல்லாத பல திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறோம். முன்பு சொன்ன புதுமைப் பெண் திட்டம் என்பது நாங்கள் தேர்தல் வாக்குறுதியில் சொல்லாதது. ஓரிரு திட்டங்கள் பாக்கி இருக்கிறது. அது எல்லாத்தையும் வருகிற ஓராண்டிற்குள் நிறைவேற்றிக் காட்டுவோம். நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவேன் என்றார்.

நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திரமோடி ஆற்றிய பதிலுரை பற்றி உங்கள் பார்வை என்ன? என உங்களில் ஒருவனில் கேட்ட கேள்விக்கு, யார் கேட்ட கேள்விக்கும் பதில் சொல்லாமல், மணிக்கணக்கில் எவ்வாறு பேசுவதை என்பதை நான் தெரிந்து கொண்டேன். பா.ஜ.க ஆட்சி மீதும், பிரதமர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. அது எதற்குமே பிரதமர் பதில் சொல்லவில்லை. ‘நாட்டு மக்கள் எனக்குக் கவசமாக இருக்கிறார்கள்’ என்பதை மக்கள் சொல்லவில்லை, அவராகச் சொல்லிக் கொள்கிறார்.’சேறு வீசுங்கள் – தாமரை மலரும்‘ என்று சொல்லி இருக்கிறார் பிரதமர். நீர்நிலைகளில் மலரும் பூதான் தாமரை. அதற்காகத் தண்ணீர் உள்ள எல்லா இடத்திலேயும் மலர்ந்துவிடாது.

சேறு இருக்கிற இடமெல்லாம் மலர்ந்துவிடாது. இவ்வாறு வார்த்தை ஜாலங்கள்தான் அவரது உரையில் இருந்ததே தவிர, பிபிசி ஆவணப்படம் பற்றியோ, அதானி விவகாரம் குறித்தோ அவர் விளக்கம் அளிக்கவில்லை. நாட்டுக்கு கொடுத்த வாக்குறுதியில் எதை நிறைவேற்றி இருக்கிறோம் என்று பிரதமர் வரிசைப்படுத்தவில்லை.சேதுசமுத்திரத் திட்டம், நீட், மாநில உரிமைகள், ஆளுநரின் தலையீடுகள், ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காதது என எத்தனையோ கேள்விகளைத் தி.மு.க உறுப்பினர்கள் கேட்டார்கள். அதற்கும் பிரதமர் உரையில் பதில் இல்லை. குறிப்பாகத் தமிழ்நாட்டுக்குச் சொல்ல பிரதமரிடம் எதுவுமே இல்லை எனக் கூறினார்.

MUST READ