- Advertisement -
வெளிநாடு செல்வது ஏன்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி
9 நாள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் செல்கிறார். விமான நிலையம் செல்வதற்கு முன்பாக அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
விமானத்தில் புறப்படுவதற்கு முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க பல்வேறு நாடுகளுக்கு சென்று அழைப்பு விடுக்க உள்ளேன். பெரு நிறுவனங்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்க உள்ளேன்.

சிங்கப்பூர் பயணத்தின்போது புதிய தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.வருகிற ஜனவரி மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளது. கடந்த முறை துபாய் பயணத்தின்போது கிடைக்கப்பெற்ற ரூ.6,100 கோடி முதலீடுகள் மூலம் 15,000 வேலை வாய்ப்புகள் உருவாகின. திமுக ஆட்சி பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் ரூ.2.95 லட்சம் கோடி முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. 2 ஆண்டுகளில் 4.12 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன” எனக் கூறினார்.