spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்வதற்கு சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருப்பதே காரணம்- மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்வதற்கு சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருப்பதே காரணம்- மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்வதற்கு சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருப்பதே காரணம்- மு.க.ஸ்டாலின்

அடுத்த ஓராண்டு காலத்துக்கு மக்களை பாதிக்கும் எந்த ஒரு சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என காவல் உயர் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

மூன்று நாள் பயணமாக இன்று சேலம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Photo: CM MKStalin

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்வதற்கு சட்ட – ஒழுங்கு சிறப்பாக இருப்பதே காரணம். கடந்த 6 மாதத்தில் காவல்துறை செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளன. அடுத்த ஓராண்டுக்கு மக்களை பாதிக்கும் எந்த ஒரு சட்ட – ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்னை கண்டறியப்பட்டவுடன் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். காவல்நிலைய மரணங்கள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் காவல்துறை அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

"சீண்டிப் பார்க்க வேண்டாம்; எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும்....."- மத்திய பா.ஜ.க. அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
Photo: CM MKStalin

கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் வெகுவாக குறைந்துள்ளது. பொது இடங்களில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வது காவல்துறை கடமை. மக்களிடம் பெறப்படக்கூடிய புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது நடுநிலைமை தவறக்கூடாது. புகார்கள் மீது தகவல் அறிக்கை பதியப்பட்டு விருப்பு வெறுப்பின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்நிலையங்களில் சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் அங்கேயே பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர்க்க வேண்டும். போதைப்பொருள் விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும்.

we-r-hiring

சமூக வலைதளங்கள் மூலம் சாதி, மத மோதல்களை தூண்டுபவர்கள் அதிகமாகிவருகின்றனர். சமூக வலைதளங்களில் வன்மங்களை பரப்புபவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், குற்றமே நடைபெறவில்லை என்ற புள்ளி விவரம் வருவதையே எதிர்பார்க்கிறேன். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் மிக எச்சரிக்கையுடன் காவல்துறை செயல்பட வேண்டும். நச்சுக்கருத்துக்களை பரப்புவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றங்களே நடைபெறவில்லை என்ற செய்தி மட்டுமே, எனக்கு திருப்தியை அளிக்கும்” எனக் கூறினார்.

MUST READ