Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த பலர் முயற்சி - மு.க.ஸ்டாலின்

அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த பலர் முயற்சி – மு.க.ஸ்டாலின்

-

அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த பலர் முயற்சி – மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் மற்றும் வனத்துறைஅதிகாரிகளின் 2 நாட்கள் மாநாடு தொடங்கி நடைபெற்றது.

Image

இதில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பொதுமக்கள் கூடும் இடங்களில் அமைதியை ஏற்படுத்திக் காட்டுவது நமது முதல் இலக்கு. அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு இடமளிக்கக்கூடாது. நாடாளுமன்ற நடைபெறவிருப்பதால், தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும். கள்ளச்சாராயம், போதை பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும். அதுதொடர்பான குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். குற்றவாளிகளை உடனே கைது செய்து தண்டனை பெற்று தருவதில் மும்முரம் காட்ட வேண்டும். பொய்ச்செய்திகள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் திட்டங்கள் கடைகோடி மனிதரையும் சென்றடைய வேண்டும்.

கலெக்டர்கள் மற்றும் எஸ்பிக்கள் சமூக தளங்களை கண்காணிக்க வேண்டும் ,உண்மைக்கு புறம்பான செய்திகள் அதிகம் வருகின்றன. சாலை விபத்துகளால் அதிக உயிரிழப்பு ஏற்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பது எனக்கு மிகுந்த கவலையளிக்கிறது. இந்த நிலையை மாற்ற காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை ஒருங்கிணைந்து விபத்துகளை குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும்” என்றார்.

MUST READ