spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகலைஞர் வழியில் சமச்சீர் வளர்ச்சி, சமூக நீதியே திமுகவின் இரு கண்கள்- மு.க.ஸ்டாலின்

கலைஞர் வழியில் சமச்சீர் வளர்ச்சி, சமூக நீதியே திமுகவின் இரு கண்கள்- மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

கலைஞர் வழியில் சமச்சீர் வளர்ச்சி, சமூக நீதியே திமுகவின் இரு கண்கள்- மு.க.ஸ்டாலின்

கடலூரில் சந்தை வாய்ப்பை உருவாக்கும் நோக்கோடு மெய்நிகர் கண்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

"பட்டாசுக் கிடங்கு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 3 லட்சம் நிவாரணம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
Photo: CM MKStalin

அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சிறு, குறு, நடுத்தர தொழில் துறைகளுக்காக தனி கொள்கை வகுத்தவர் கலைஞர். கலைஞர் வழியில் சமச்சீர் வளர்ச்சி, சமூக நீதியை இரு கண்களாக திமுக அரசு பின்பற்றுகிறது. அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்கீழ் 127 பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்பட்டது. சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினருக்காக 4 தனி குழுமங்கள் அமைக்கப்பட உள்ளது. சேலம், ஓசூர், கடலூர் உள்ளிட்ட 4 இடங்களில் வட்டார புத்தொழில் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. ஊரக பகுதிகளில் வேலைவாய்ப்பு பெருக சிறு, குறு, தொழில் நிறுவனங்கள் அவசியம்.

MKStalin

we-r-hiring

இதுவரை 6 தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டுள்ளன. புதிதாக 6 தொழிற்பேட்டைகளை உருவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. வெளிமாநில தொழிலாளர்கள் தங்குவதற்காக, தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்காக பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறந்த நிறுவனங்கள், வங்கிகளுக்கான விருதுகளை பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். MSME துறைக்காக ரூ.1,505 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.

MUST READ