Homeசெய்திகள்தமிழ்நாடு"பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு இருக்காது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு இருக்காது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

-

 

"பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு இருக்காது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
Video Crop Image

திருச்சியில் இன்று (ஜூலை 26) மாலை 05.00 மணிக்கு நடைபெற்ற தி.மு.க.வின் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், “தி.மு.க.வின் தீரர்கள் கோட்டை தான் திருச்சி. திருச்சிக்கும், தி.மு.க.வுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. முக்கியமான மாநாடுகளை கலைஞர் திருச்சியில் தான் நடத்துவார். திருச்சியில் நடைபெற்ற மாநாடுகள் திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளன.

ஆளுநரிடம் ‘தி.மு.க. பைல்ஸ் 2’ ஆவணங்களைக் கொடுத்த அண்ணாமலை!

தி.மு.க. தொடங்கி 75 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்காக தி.மு.க. பொறுப்பாளர்கள் உழைக்க வேண்டும். தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் நலப்பணியாற்றி வருகிறோம். வாக்காளர் குடும்பத்துடன் நெருக்கமான நட்புக் கொள்ள வேண்டும்; அவர்கள் குடும்பத்தில் ஒருவராக மாற வேண்டும். யாருக்கு என்ன தேவையோ, அதைக் கண்டறிந்து பெற்றுத் தாருங்கள்.

எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத அளவுக்கு ஆட்சி நடத்தி வருகிறோம். உழவர்கள், மாணவர்கள் என அனைவருக்கும் ஏராளமான நலத்திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்துகிறது. தேர்தல் வரை ஆளுநர் ஆர்.என்.ரவி இருந்தால் தி.மு.க.வுக்கு வாக்குகள் அதிகரிக்கும். பா.ஜ.க. ஆட்சியில் இருந்தால் இந்தியாவின் அரசியலமைப்பு, சமூகநீதியைக் காப்பாற்ற முடியாது. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு கூட இருக்காது.

“அமலாக்கத்துறையினர் காவல்துறை அதிகாரிகள் கிடையாது”- உச்சநீதிமன்றத்தில் கபில் சிபல் வாதம்!

இந்தியாவின் கட்டமைப்பை பா.ஜ.க. சிதைத்துவிட்டது. இதற்கு நாடாளுமன்றத் தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் தங்கள் விருப்பத்திற்கேற்ப இருக்கைகளை அமைக்க பா.ஜ.க. நினைக்கிறது. வட மாநில எம்.பி.களை வைத்து ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க. நினைக்கிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

MUST READ