Homeசெய்திகள்தமிழ்நாடுபட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி- மு.க.ஸ்டாலின்

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி- மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி- மு.க.ஸ்டாலின்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு நிதியுதவி அறிவித்துள்ளார்.

பட்டாசு விபத்து

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிருஷ்ணகிரி மாவட்டம்‌ மற்றும்‌ வட்டம்‌, பழையபேட்டை நகரம்‌, நேதாஜி ரோடு, போகனப்பள்ளி கிராமத்தில்‌ இயங்கிவரும்‌ தனியாருக்குச்‌ சொந்தமான பட்டாசுக்‌ கடையில்‌ இன்று (29-7-2023) காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில்‌ எட்டு பேர்‌ உயிரிழந்தனர்‌ என்ற துயரமான செய்தியினைக்‌ கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்‌.

"விண்ணப்பங்களைப் பெற ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும்"- மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்!
File Photo

மீட்பு மற்றும்‌ நிவாரணப்‌ பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்த மாண்புமிகு உணவு மற்றும்‌ உணவுப்‌ பொருள்‌ வழங்கல்‌ துறை அமைச்சர்‌ திரு.அர.சக்கரபாணி அவர்களை அனுப்பிவைத்துள்ளேன்‌. மேலும்‌ இவ்விபத்தில்‌ படுகாயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்‌ சிகிச்சை பெற்றுவருபவர்களுக்குச்‌ சிறப்பு சிகிச்சை அளிக்கவும்‌ அறிவுறுத்தியுள்ளேன்‌. உயிரிழந்தவரின்‌ குடும்பத்தினருக்கும்‌, உறவினர்களுக்கும்‌ எனது ஆழ்ந்த இரங்கலையும்‌, ஆறுதலையும்‌ தெரிவித்துக்கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம்‌ ரூபாயும்‌, படுகாயமடைந்து மருத்துவமனையில்‌ சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு ஒரு லட்சம்‌ ரூபாயும்‌, காயமடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம்‌ ரூபாயும்‌ முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும்‌ உத்தரவிட்டுள்ளேன்‌” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ