spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி!

வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி!

-

- Advertisement -

 

வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி!
Video Crop Image

திண்டுக்கல்லில் அரசு மருத்துவரிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

we-r-hiring

“ரூபாய் 2,000 நோட்டுகளில் 97.26% திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு!”

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வரும் மருத்துவர் சுரேஷ் பாபு, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி, கடந்த 2018- ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர், இவரது மருத்துவமனை மற்றும் வீடுகளில் சோதனை நடத்தி வழக்குப்பதிவுச் செய்திருந்தனர்.

இந்த நிலையில், மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அலுவலராகப் பணிபுரிந்து வரும் அன்கிட் திவாரி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சுரேஷ் பாபுவைத் தொடர்புக் கொண்டு இந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க போவதாகவும், இதில் இருந்து விடுவிக்க 3 கோடி ரூபாய் தர வேண்டும் என்றும் வாட்ஸ் அப் கால் மூலம் கேட்டுள்ளார்.

இதற்கு அவர் ஒத்துக்கொள்ளாத நிலையில், இறுதியாக 51 லட்சம் ரூபாய் தந்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளார். இதையடுத்து, கடந்த நவம்பர் 01- ஆம் தேதி 20 லட்சம் ரூபாயை அன்கிட் திவாரியிடம் சுரேஷ் பாபு கொடுத்துள்ளார். மீண்டும் வாட்ஸ் அப் கால் மூலம் தொடர்புக் கொண்டு பேசிய அமலாக்கத்துறை அதிகாரி, மீதியுள்ள 31 லட்சம் ரூபாயை தர வேண்டும் என கேட்டு மிரட்டியுள்ளார்.

பெங்களூருவில் 28 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஆனால், மருத்துவர் சுரேஷ் பாபு, திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், வழக்குப்பதிவுச் செய்த லஞ்ச ஒழிப்பு காவல்துறை, 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சுரேஷ் பாபுவிடம் கொடுத்து அனுப்பினர்.

திண்டுக்கல்- மதுரை சாலையில் அமலாக்கத்துறை அதிகாரி காரில் உள்ள டிக்கியில் சுரேஷ் பாபு பணத்தை வைத்ததும், மதுரை நோக்கிச் சென்றார். பின்னாள் காவல்துறையினர் காரை விரட்டி வருவதை அறிந்த அன்கிட் திவாரி, லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையின் கார் மீது மோதிவிட்டு, நிற்காமல் தப்பிச் சென்றுள்ளார்.

விடாமல் 15 கி.மீ. தொலைவிற்கு துரத்திச் சென்ற லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், சுங்கச்சாவடியில் மடக்கிப் பிடித்தனர். கார் மற்றும் 20 லட்சம் ரூபாய் பணத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் வைத்து அன்கிட் திவாரியிடம் 15 மணி நேரமாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இதில், சென்னை, மதுரையைச் சேர்ந்த பல அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. பின்னர், அன்கிட் திவாரி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மோகனா வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். வரும் டிசம்பர் 15- ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து, திண்டுக்கல் மாவட்ட சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

MUST READ