Homeசெய்திகள்இந்தியாபெங்களூருவில் 28 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பெங்களூருவில் 28 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

-

 

பெங்களூருவில் 28 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
File Photo

பெங்களூருவில் 28 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது அம்மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அயோத்திதாச மணிமண்டபத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு பகுதியில் அமைந்துள்ள பசவேஸ்வராநகர், யெலஹங்கா உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் 28 பள்ளிகளுக்கு மர்மநபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டப் பள்ளிகளில் வெடிகுண்டு மீட்புப் படையினர் சோதனை நடத்தினர்.

மின்னஞ்சல் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை அடையாளம் காண பெங்களூரு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்மந்தப்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் பள்ளிகளின் முன் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளி ஒன்றை கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் நேரில் பார்வையிட்டார்.

நவம்பரில் மெட்ரோ ரயிலில் 80 லட்சம் பேர் பயணம்!

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கர்நாடக மாநில காவல்துறை உயரதிகாரிகள் சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு விரைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் சம்பவம், பெங்களூரு மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

MUST READ