spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு'பருவமழை முன்னெச்சரிக்கைப் பணி தீவிரம்'- மெட்ரோ நிர்வாகம் தகவல்!

‘பருவமழை முன்னெச்சரிக்கைப் பணி தீவிரம்’- மெட்ரோ நிர்வாகம் தகவல்!

-

- Advertisement -

 

'பருவமழை முன்னெச்சரிக்கைப் பணி தீவிரம்'- மெட்ரோ நிர்வாகம் தகவல்!
Photo: Chennai Metro Train

சென்னையில் மெட்ரோ பணிகள் நடந்து வரும் இடங்களில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

we-r-hiring

தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இதோ.

மழைநீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து அங்கு மின் மோட்டார் மூலம் மழை நீரை வெளியேற்ற பல்வேறு திறன்களைக் கொண்ட 350 நீர் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசு!

இதில் குறிப்பாக, பனகல் பூங்காவில் நான்கு நீர் பம்புகளை நிறுவியுள்ளது. இதில் இரண்டு 100 ஹெச்பி மோட்டார் திறன் மற்றும் ஒன்று 25 ஹெச்பி மற்றும் ஒன்று 10 ஹெச்பி மோட்டார் திறன் கொண்டது. சேகரிக்கப்படும் தண்ணீர், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் கட்டப்பட்ட 1.25 லட்சம் லிட்டர் பனகல் பார்க் சம்ப்பில் சேமிக்கப்பட்டு, பின்னர் நந்தனம் கால்வாயில் திருப்பி விடப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ