முன்னாள் முதல்வர் கலைஞர் மருமகன் முரசொலி செல்வம் பத்திரிகை துறையில் ஜனநாயகத்திற்கு பாதுகாப்பாக இருந்தார் என்று பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மருமகனும், முதல்வர் மு. க. ஸ்டாலின் தங்கை செல்வி கணவரருமான முரசொலி செல்வம் உடல்நலம் குறைவால் பெங்களூர் மருத்துவமனையில் இன்று காலமானார். இவரது மறைவிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
இவரது மறைவிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது :முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மருமகனும், முதல்வர் மு. க. ஸ்டாலின் தங்கை செல்வி கணவரருமான முரசொலி செல்வம் உடல்நலம் குறைவால் பெங்களூர் மருத்துவமனையில் இன்று காலமானார் என்ற செய்தியை கேட்டு மிகவும் துக்கமும் துயரமும் அடைந்தேன்.
கழகத்தின் கொள்கைச் செல்வம் மறைவு – இடி போல என் நெஞ்சத்தைத் தாக்கியது – முதல்வர் மு.க.ஸ்டாலின்
முரசொலி செல்வம் மெல்லியக் குரலில் பேசி எல்லோரிடமும் அன்பாக பழகக்கூடியவர் அவரது மறைவு செய்தி என் மனதை உலுக்கியது. அவருடைய முரசொலி நாளிதழில் திறம்பட ஆசிரியராக பணியாற்றி வந்தார். ஆசிரியராக பொறுப்பேற்று தன் எழுத்துக்களால் ஜனநாயக குரலாக ஒலித்தவர் அவரது கட்டுரைகள் நான் தொடர்ந்து படித்து வருவதுண்டு. முரசொலி நாளிதழை தொடர்ந்து திறம்பட கடைசி காலம் வரை பணியாற்றி வந்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அவரின் மறைவு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரை இழந்து வாடும் அவரது மனைவி செல்வி குடும்பத்தினருக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் குடும்பத்திற்கும் மற்றும் முரசொலி நாளிதழில் பணிபுரியும் அனைத்து நிர்வாகிகளுக்கு மணிச்சுடர் நாளிதழ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பிலும் எனது சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.