Homeசெய்திகள்நான் முதலில் தயாரித்தது விஜய் படம் தான் - நீண்ட கால நண்பர் விஜய்யின் புதிய...

நான் முதலில் தயாரித்தது விஜய் படம் தான் – நீண்ட கால நண்பர் விஜய்யின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள் :  உதயநிதி ஸ்டாலின்

-

- Advertisement -
kadalkanni

நான் முதலில் தயாரித்தது விஜய் படம் தான் - நீண்ட கால நண்பர் விஜய்யின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள் :  உதயநிதி ஸ்டாலின்“ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். நீண்ட கால நண்பர் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்.” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் விஜய்யின் தவெக முதல் மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் இடம் தவெக மாநாடு பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்குப் பதில் அளித்த அவர், “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். தமிழ்நாட்டில் பல கட்சிகள் உதயமாகியுள்ளன. ஆனால் மக்கள் ஆதரவைப் பெறுவது தான் முக்கியம். பல கட்சிகள் காணாமல் போயும் உள்ளன. ஒரு தயாரிப்பாளராக நான் முதலில் தயாரித்ததே விஜய் படம் தான். அந்த வகையில் நீண்ட கால நண்பர் விஜய்யின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்.” என்று  பேசி இருக்கிறார்.

MUST READ