spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகருணாநிதி குறித்து அவதூறு- நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது

கருணாநிதி குறித்து அவதூறு- நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது

-

- Advertisement -

கருணாநிதி குறித்து அவதூறு- நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது

தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி குறித்து டிவிட்டர் பக்கத்தில் அவதூறாக கருத்து வெளியிட்ட புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மேலாத்தூரைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

arrested

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மேலாத்தூரைச் சேர்ந்தவர் நிலாகண்ணன் (எ) கணேஷ்குமார். நாம் தமிழர் கட்சியின் ஆலங்குடி தொகுதி தலைவராக உள்ள இவர், தனது டுவிட்டர் பக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பும் வகையில் தகவலை பதிவிட்டுள்ளார்.

we-r-hiring

இதனையடுத்து இதைப்பார்த்த புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் விமலாதிராஜன் உள்ளிட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் நிலாகண்ணன் (எ) கணேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆலங்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து வடகாடு போலீசார் கணேஷ் குமார் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

MUST READ