பாஜகவினர் நீதிக்கு தலை வணங்கக்கூடியவர்கள் – நயினார் நாகேந்திரன்
பாஜகவினர் நீதிக்கு தலை வணங்கக்கூடியவர்கள் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “பாஜக மற்றும் பாஜக தலைவர்கள் நீதிக்கு தலைவணங்கக்கூடியவர்கள். நீதிமன்ற தீர்ப்பில் தலையிட்டது கிடையாது. 2 ஆண்டுகள் தண்டனை பெற்றவர்கள் பதவியில் இருக்க முடியாது. ராகுல்காந்திக்கு அளிக்கப்பட்ட தண்டனை பற்றி பேசுவதை சபையில் அனுமதிக்கக்கூடாது. பாஜகவோ, பாஜக தலைவர்களோ நீதிமன்ற தீர்ப்பில் தலையிட்டது கிடையாது. ராகுல் காந்திக்கு அளித்த தண்டனை பற்றி பேசுவதை சட்டசபையில் அனுமதிக்கக் கூடாது. சட்டசபையில் மக்கள் பிரச்னைகளை பேசாமல், கட்சி பிரச்னையை பேசுவது வேதனையளிக்கிறது” எனக் கூறினார்.