Homeசெய்திகள்தமிழ்நாடுநாமக்கல் அருகே அரசு பேருந்தின் முன்சக்கரம் கழன்று சாலையில் ஓடியதால் பரபரப்பு

நாமக்கல் அருகே அரசு பேருந்தின் முன்சக்கரம் கழன்று சாலையில் ஓடியதால் பரபரப்பு

-

- Advertisement -

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே அரசு பேருந்தின் முன்சக்கரம் கழன்று சாலையில் ஓடியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

சேலத்திலிருந்து ஈரோடு செல்வதற்காக நேற்று மாலை புறப்பட்ட அரசு பேருந்தை ஓட்டுநர் ராஜா என்பவர் இயக்கி வந்தார். இதில் பேருந்தானது வரும் வழியிலேயே பழுதானதால் பயணிகளை இறக்கிவிட்டு மாற்று வண்டியில் அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் பேருந்தில் ஓட்டுனர் ராஜாவும், நடத்துனர் மாயக்கண்ணனும் பழுதடைந்த பேருந்தினை ஈரோடு பணிமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதில் பேருந்தானது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியான, சிவசக்தி நகர் அருகே வந்து கொண்டிருந்த பொழுது, திடீரென பேருந்தின் முன் சக்கரம் கழன்று சென்று அருகில் இருந்த கடைக்குள் விழுந்தது. பேருந்தின் முன்சக்கரம் கழன்றதால், பேருந்து தார் சாலையில் மோதி தீப்பொறி கக்கியபடி வேகமாக வந்தது.

இதனைத்தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் ராஜா சாமர்த்தியமாக வாகனத்தை சாலையின் ஓரமாக திருப்பி நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதில் பேருந்தில் பயணிகள் இல்லாத காரணத்தினால், ஓட்டுனர் ராஜா அரசு பேருந்தினை சாமர்த்தியமாக இயக்கிய்தால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் இந்த சம்பவமானது குமாரபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுமல்லாமல், இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

MUST READ