Homeசெய்திகள்தமிழ்நாடுநீட் தேர்வை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்

-

- Advertisement -

தி.மு.க.வில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நீக்கம்!

 

நீட் தேர்வை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் தலைமையில்  இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது

நீட் தேர்வில் நடைபெற்ற மோசடிகளால் இந்தியா முழுவதும் நீட் தேர்வு என்பதே பெரும் மோசடி என்பதைத் தான் கழகத் தலைவர் அவர்கள் வலியுறுத்தி அதனை கடுமையாக எதிர்த்து வருகிறார். ஏற்கனவே நீட் தேர்வே தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என்பதற்காக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பியிருக்கும் சட்டமசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் தராத நிலையில், இன்று (28.6.2024) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், நீட் விலக்கு சட்டமுன்வடிவிற்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள், முன்மொழிந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நீட் தேர்வில் உடனடியாக நடைபெற்றுள்ள ஒருமனதாக செயல்படுத்திட வேண்டுமென்றும் மிகப்பெரிய மோசடிகளை, குளறுபிடிகளை களைவதற்கு மேல்நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நீட் எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும், நீட் தேர்வை நடத்தியே தீருவேன் என்ற எதேச்சதிகாரப் போக்கினை கடைபிடிக்கும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசை கண்டித்து தி.மு.க. மாணவர் அணிச் சார்பில் வரும், 03.07.2024 அன்று காலை 09.00 மணியளவில், சென்னை, வள்ளூவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

நீட் தேர்வு வினாத்தாளில் இருந்த குளறுபடிகளால் அதிர்ச்சி

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், இந்நிலையில் நீட் தேர்வு முறைகேட்டைக் கண்டித்து இன்று திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

 

MUST READ