
நெல்லை மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ பட்டியலை நெல்லை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
இரட்டை வேடங்களில் நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர்…. ‘தேவரா’ படத்தின் ரிலீஸ் எப்போது?
அதன்படி, கனமழை, வெள்ளப் பெருக்கு காரணமாக, நெல்லை மாவட்டத்தில் சேத விவரங்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நேற்று (டிச.24) மாலை வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, நெல்லை மாவட்டத்தில் மட்டும் 67 மாடுகள் உயிரிழந்துள்ளது. 1,064 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. ஆடுகள் 504, கன்றுகள் 135, கோழிகள் 28,392 உயிரிழந்துள்ளது. அதேபோல், 16 பேர் மழை, வெள்ளப் பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர்.
உலகப் புகழ்பெற்ற பத்திரிகையில் விஜய் சேதுபதி… கிறிஸ்துமஸ் ட்ரீட்…
இதுவரையான கணக்கெடுப்பின் படி, மொத்த நிவாரணத் தொகையான ரூபாய் 2,87,07,700- ல் இன்று (டிச.25) முதற்கட்டமாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 21 நபர்களுக்கு ரூபாய் 58,14,000 நிவாரணத் தொகையை வழங்கினார்.