கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.
பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளைத் தவறாக வழி நடத்த முயன்றதாக கடந்த 2018- ஆம் ஆண்டு வழக்குப்பதிவுச் செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் பேராசிரியர் நிர்மலா தேவி, உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவுச் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
பாஜகவிற்கு வாக்களிக்க மாட்டோம் – உ.பி மக்கள் கருத்து
இது தொடர்பான வழக்கு ஸ்ரீ வில்லிப்புதூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நிர்மலா தேவி குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில், நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்துள்ளார். ஏற்கனவே, சிறையில் இருந்த காலங்களைத் தவிர்த்து மீதி நாட்கள் சிறையில் இருப்பார் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், நிர்மலா தேவிக்கு ரூபாய் 2.42 லட்சம் அபராதம் விதித்துள்ள நீதிபதி, அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.