Homeசெய்திகள்அரசியல்பாஜகவிற்கு வாக்களிக்க மாட்டோம் - உ.பி மக்கள் கருத்து

பாஜகவிற்கு வாக்களிக்க மாட்டோம் – உ.பி மக்கள் கருத்து

-

- Advertisement -

நான் பாஜககாரன்… ஆனால் பாஜகவிற்கு வாக்களிக்க மாட்டேன். உ.பி தேர்தல் களத்தில் மக்கள் கருத்து

உ.பி தேர்தல் களத்தில் மக்கள் கருத்து

உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக சார்பில் நல்ல வேட்பாளர்கள்  நிறுத்தப்படவில்லை என்றும், இதனால் பாஜகவின் வாக்கு சதவீதம் இந்த தேர்தலில் குறையும் என்றும், பாஜகவின் ஆதரவாளர்களே  இம்முறை பாஜகவிற்கு வாக்களிப்பதில்லை என கருத்து தெரிவித்துள்ளனர்.

மே 7ம் தேதி நடைபெற உள்ள மூன்றாம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் உத்தரபிரதேச மாநிலத்தில் ஆக்ரா, பதேபூர் சிக்ரி, மெயின்புரி, பிரோசாபாத் உள்ளிட்ட 10 தொகுதிகளில் நடைபெறுகிறது. இதில் ஆக்ரா மற்றும் பதய்பூர்சிக்ரி ஆகிய 2 தொகுதிகள் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக பார்க்கப்படுகின்றது. அதில் ஆக்ரா(தனி) தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும்  எஸ்.பி.சிங் மீது தொகுதியில் பாஜகவினரிடையே அதிருப்தி நிலவுகிறது.

பாஜக எம்பி எஸ்.பி.சிங்
 

கடந்த 5 ஆண்டுகளாக தொகுதி பக்கம் வராத எம்பி, மக்களிடையே ஜாதி வேற்றுமை பார்ப்பதாகவும், எந்த பணிகளும் மேற்கொள்ளவில்லை என்றும் மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதைவேளையில் உ.பி முதல்வர் யோகி ஆதித்தியநாத் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர்களின் செயல்பாடுகள்  சிறப்பாக இருப்பதாகவும், அதற்காக வேறு வழியின்றி  பாஜகவிற்கு வாக்களிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

நான் பாஜகவை ஆதரிக்கிறேன், ஆனால் நான் பாஜகவிற்கு வாக்களிக்க மாட்டேன். ஏனென்றால் இந்த தொகுதியில் வேட்பாளர் சரியில்லை. எப்போதும் தொகுதிக்கு வந்ததில்லை, எந்த வேலையும் செய்யவில்லை. அதனால் பாஜகவின் வாக்குவங்கி குறைகிறது. இங்குள்ள மக்கள் யோகி, மோடிக்காக மட்டும் தான் வாக்களிப்பார்கள்.

மோடியும் யோக்கியும் சிறப்பாக பணி செய்கின்றனர்

பிரச்சாரத்திற்காக வந்த வேட்பாளர் அதற்கு முன்பாக வந்ததில்லை. எதுவும் புதிதாக செய்யவில்லை, வாக்குறுதியும் அளிக்கவில்லை. எம்பியிடம் மக்கள் கோரிக்கை வைத்தாலும் எந்த வேலையும் அவர் செய்து கொடுப்பதில்லை. அங்கிருந்து துரத்தி விடுகிறார், ஜாதியை வைத்து பேசுகிறார். ஜாதி தான் அவர் அரசியல். இந்து முஸ்லீம் இடையே பிரச்சனை இல்லை. எங்களுக்குள்ளே எந்த வேறுபாடும் இல்லை.

ஆக்ராவில் போட்டியிடும் பாஜக எம்பி எஸ்.பி.சிங் எங்களுக்கு பிடிக்கவில்லை. ஆனால் யோகி, மோடி முகத்துக்காக பாஜகவிற்கு வாக்களிக்கிறோம், அவரே மற்ற தேர்தலில் நின்றிருந்தால் வாக்களிக்க மாட்டோம். வேட்பாளர் சரியில்லை! இந்த முறை பாஜக நல்ல நபர்களை வேட்பாளர்களாக களம் இறக்கவில்லை. இதனால் வேட்பாளர்களுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு இருக்கிறது.

மோடியும் யோக்கியும் சிறப்பாக பணி செய்கின்றனர் அதனால் நான் பாஜகவிற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். இந்த எம்பியை மீண்டும் நிறுத்தியது பிடிக்கவில்லை என எடுத்துக்கொள்ளலாம். , வேறு வழியில்லாமல் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம் என அத்தொகுதி மக்கள் மிகுந்த வருத்ததுடன் தெரிவிக்கின்றனர்.

MUST READ