Homeசெய்திகள்தமிழ்நாடுநிர்மலா சீதாராமனுக்கு சு.வெங்கடேசன் கண்டனம்! 

நிர்மலா சீதாராமனுக்கு சு.வெங்கடேசன் கண்டனம்! 

-

- Advertisement -

 

ஜூலை 11- ஆம் தேதி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்!

ஜல்லிக்கட்டு தொடர்பான மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மதுரை மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சங்ககால தமிழ் இலக்கியமான கலித்தொகையில், ஏறு தழுவுதலில் பங்கேற்கும் காளைகள், சிவன், முருகன், பலராமன், கிருஷ்ணன் உள்ளிட்ட தெய்வங்களுடன் ஒப்பிட்டு உவமைப்படுத்தப்பட்டுள்ளன. அக்கால மக்களின் வாழ்க்கை இப்படியிருக்க, அதனை வேறு விதமாக காட்டுவது தீய உள்நோக்கம் மற்றும் பிரிவினைவாத நோக்கம் கொண்டது” என்று பதிவிட்டதுடன், டி.எஸ்.கிருஷ்ணன் என்பவர் எழுதிய ’ஜல்லிகட்டு ஒரு சனாதனத் திருநாள்’ என்ற கட்டுரையை பகிர்ந்திருந்தார்.
நிர்மலா சீதாராமனுக்கு சு.வெங்கடேசன் கண்டனம்! 
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் சு.வெங்கடேசன், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ஏறுதழுவல் என்னும் ஜல்லிக்கட்டின் வரலாற்றை மாற்ற நினைக்கிறது ஒரு கூட்டம். தீய உள்நோக்கங்கொண்ட பிரிவினைவாதம்” என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார்.

உலகம் அதிர உரக்கச் சொல்வோம்….கீழடி அகழாய்வு தொடங்கி அலங்காநல்லூர் வாடிவாசல் வரை “தமிழும் திமிலும்” எமது பேரடையாளம்.” இவ்வாறு ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ