Homeசெய்திகள்தமிழ்நாடுநவ. 17 வரை கனமழை  எச்சரிக்கை: ஆட்சியர்களுக்கு, பேரிடர் மேலாண்மைத்துறை கடிதம்

நவ. 17 வரை கனமழை  எச்சரிக்கை: ஆட்சியர்களுக்கு, பேரிடர் மேலாண்மைத்துறை கடிதம்

-

- Advertisement -

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வரும் 17ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, மாவட்ட ஆட்சியர்களுக்கு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வலியுறுத்தியுள்ளது.

மழைக்கு வாய்ப்பு

இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது. அதில், வரும் 17ஆம் தேதி வரை சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

tamilnadu assembly

கனமழை சூழ்நிலையை சரியான முறையில் கையாளுவதற்கும், மாவட்டம் முழுவதையும் தயார்படுத்த வேண்டும் என்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது. அனைத்து துறைகளும் இணைந்து தேவையான ஆயத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், இதனால் மிக அதிகமான கனமழை முதல் மிகக் கனமழை வரை ஏற்படும்பட்சத்தில்,எந்தத் தேவையையும் சமாளிக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது

MUST READ