இரயில் தண்டவாளத்தில் மூதாட்டி – இரயிலை நிறுத்திய லோகோ பைலட்
இரயில் தண்டவாளத்தில் படுத்திருந்த சற்று மனநிலை பாதிக்க மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை-சேலம் எக்மோர் ரயிலை நடுவழியில் அரை மணி நேரம் நிறுத்தி, ஆம்புலன்ஸ் மூலம் மூதாட்டியை அனுப்பி வைத்தனர்.

சென்னை- சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு சென்னை, எக்மோர் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பி இன்று காலை 6.30 மணி அளவில் சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் வந்தது. பின்னர் டவுன் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பி ரயில் ஜங்ஷன் நோக்கி சென்று கொண்டிருந்தபோது சத்திரம் பகுதியில் தண்டவாளத்தில் மூதாட்டி ஒருவர் படுத்திருப்பதை அறிந்த ரயிலின் லோகோ பைலட் திடீரென ரயிலை நடு வழியில் நிறுத்தினார்.
பின்னர் ரயில்வே பாதுகாப்பு போலீசார் தண்டவாளத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மூதாட்டியை அப்புறப்படுத்தினர். பின்னர் அங்கிருந்து ரயில் மீண்டும் புறப்பட்டு சென்றது இதனால் சுமார் 20 மணி நேரம் காலதாமதம் ஆனது. இதனை எடுத்து சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்து மூதாட்டியை சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்த மூதாட்டி தற்கொலைக்கு
முயன்றாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயில் தண்டவாளத்தில் மூதாட்டி ஒருவர் படுத்திருந்ததை அறிந்து உடனடியாக ரயிலை நிறுத்திய லோகோ பைலட் S.K.சிங்கா-வை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.