
ஓணம் பண்டிகையையொட்டி, தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 29) உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
“கோயில் அர்ச்சகர்களின் தகுதி குறித்து ஆய்வுச் செய்ய குழு அமைக்கப்படும்”- உயர்நீதிமன்றம் தகவல்!
ஓணம் பண்டிகையையொட்டி, சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று (ஆகஸ்ட் 29) இயங்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஓணம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் வாழ்த்து!
தமிழக- கேரளா மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள கோவை, நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓணம் பண்டிகை களைகட்டியுள்ளது. பெண்கள் பாரம்பரிய உடைகளை அணிந்தும், அத்தப்பூ கோலமிட்டும், வழிபாடு நடத்தியும் வழக்கமான உற்சாகத்துடன் ஓணம் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.