Homeசெய்திகள்தமிழ்நாடுஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பொறியாளர் தூக்கிட்டுத் தற்கொலை!

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பொறியாளர் தூக்கிட்டுத் தற்கொலை!

-

 

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பொறியாளர் தூக்கிட்டுத் தற்கொலை!
File Photo

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் ரூபாய் 3 லட்சத்தை இழந்தத் துக்கத்தில், பொறியாளர் தூக்கிட்டுத் தற்கொலைச் செய்துக் கொண்டார்.

பிரியாணிக் கடையில் கெட்டுப்போன சிக்கன்!

கணபதிப்பாளையத்தின் பகுதியைச் சேர்ந்த கவின்குமார், பொறியியல் பட்டப்படிப்பை முடித்து விட்டு, மூலனூரில் உள்ள தனியார் காற்றாலை நிறுவனத்தின் பணியாற்றி வந்தார். இவர் தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் கட்டிய ரூபாய் 3 லட்சத்தை பந்தயத்தில் கவின்குமார் இழந்திருக்கிறார். மொத்த பணத்தையும் இழந்ததால், கடந்த சில நாட்களாக கவின்குமார் கடும் மன உளைச்சலில் இருந்திருக்கிறார். செய்வதறியாது தவித்த கவின் குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

இதனைக் கண்ட கவின்குமாரின் தம்பி அருகில் இருந்தவர்களின் உதவியோடு, அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றார். ஆனால், கவின்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.இந்த சம்பவம் குறித்து தாராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன், வழக்குப்பதிவுச் செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளம் பொறியாளர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம், அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ