Homeசெய்திகள்தமிழ்நாடுஇயற்கை விவசாயம் …கைதிகள் சாதனை…

இயற்கை விவசாயம் …கைதிகள் சாதனை…

-

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திறந்த வெளிசிறைச்சாலையில் விவசாயிகளாக மாறிய கைதிகள்  இயற்கை விவசாயத்தில் சாதனைப்படைத்துள்ளனர்.

காளையார் கோவில் புரசிடையுடைப்பு  கிராமத்தில் சுமார் 85 ஏக்கர் நிலப்பரப்பில் திறந்த வெளிசிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு 35 ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது.இச்சிறைச்சாலையில் நன்நடத்தையின் காரணமாக பல்வேறு சிறைகளில் இருந்து அழைத்துவரப்பட்ட  சுமார் 50 கைதிகள் இங்கு விவசாயத்தில் ஈடுபட்டு சாதனைப் புரிந்து வருகின்றனர்.

 

 

இங்கு நெல்லி,கொய்யா, வாழை,கரும்பு,காய்கறிகள்,கீரைகள் மற்றும் மாடுகள் ,ஆட்டுப் பண்ணை, கோழி வளர்ப்பு,போன்றவை  வளர்க்கப்படுவதால் இயற்கையான முறையிலேயே உரம் தயாரிக்கப்பட்டு விவசாயம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இங்கு மாட்டின் சாணம் மற்றும் தாவரங்களின் கழிவுகளின் மூலமே உரமானது போடப்பட்டு இயற்கை முறையில் விவசாயம் செய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரி பழனி தெரிவித்தார். மேலும் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை மத்திய சிறைக்கும்,மக்களுக்கும் குறைந்த விலையில் கொடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.கடந்த 3 மாதங்களில் 2 டன்  காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

கடந்தாண்டு கரும்பின் மூலம்  வெல்லமும் தயாரிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.விவசாய குடும்பத்திலிருந்து வந்த கைதிகளுக்கு இது ஒரு சிறந்த வாழ்வியல் பயிற்சி நிலையமாகவும் உள்ளது என தெரிவித்துள்ளனர்.

 

 

MUST READ