Homeசெய்திகள்தமிழ்நாடுநம் பள்ளி நம் பெருமை! அரசு பள்ளிகளில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு...

நம் பள்ளி நம் பெருமை! அரசு பள்ளிகளில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு பயணம்!!

-

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளிகளில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  நேற்று(11.07.2023)ஆய்வு  மேற்கொண்டார்.

ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் குறைகளைக் கேட்டறிந்தார்.அவர் 234 தொகுதிகளிலும் உள்ள அரசு பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.அதில் 48 தொகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் தனது ஆய்வு பயணத்தை முடித்துள்ளார்.இன்னும் 186 தொகுதிகளிலும் தனது ஆய்வு பயணத்தை   வரும் நாட்களில் செய்து முடிக்கவுள்ளார். இதற்கு முன் உள்ள எந்த கல்வித்துறை அமைச்சரும் இப்படி 234 தொகுதிகளில் உள்ள பள்ளிகளிலும்  ஆய்வினை மேற்கொண்டது இல்லை தமிழக பள்ளி கல்வி துறை வரலாற்றில் 234 தொகுதிகளிலும் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டவர்  என்ற பெருமையைக் குறியவரும் இவரே ஆவர்.

கோவை மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் தொகுதில் உள்ள மேற்கொண்ட ஆய்வு குறித்து தனது  ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பதிவினை வெளியிட்டுள்ளார்.

”ஆய்வு பயணத்தின் நோக்கமே பள்ளிகளின் அடிப்படை கட்டுமானமும்,மாணவர்களின் கற்றலும் மேம்பாடு அடைய வேண்டுமென்றால் களத்தில் இறங்கி அவர்களுடன் உரையாடவும்,செயலாற்றவும் வேண்டும் .அதற்காக தமிழ்நாடு முழுவதும் பயணிக்கும் நோக்கத்தோடு 234/77 ஆய்வு பயணத்திட்டம் தொடங்கப்பட்டது”.

அத்திட்டத்தின் படி 48 வது தொகுதியாக எஸ்.பி.வேலுமணி அவர்களின் தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுடன் உரையாடி மற்றும் ஆசிரியர்களிடமும்,நிர்வாகத்துடனும் உரையாடி அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தோம்.

”நம் பள்ளி நம் பெருமை”,முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு இது போன்ற களஆய்வு மேற்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வது தான் அவரின் குறிக்கோலாக கொண்டுள்ளார். அந்த வகையில் அனைத்து அமைச்சர்களையும் அதிக அளவில் கள ஆய்வில் ஈடுபட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிக்கும் வகையில் ”வானவில் மன்றம் “தொடங்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருவது குறிப்பிடதக்கது.மேலும் மாணவர்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்தும் வருகிறார்.

 

MUST READ