Homeசெய்திகள்தமிழ்நாடுநீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்று கேட்பது நியாயம்- ப.சிதம்பரம்

நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்று கேட்பது நியாயம்- ப.சிதம்பரம்

-

நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்று கேட்பது நியாயம்- ப.சிதம்பரம்

நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்று கேட்பது நியாயம் தான், நீட் தேர்வு ஏன் தமிழ்நாட்டிற்கு கூடாது என்று பல காரணங்கள் சொல்லி உள்ளேன் என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

"1,000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் அறிமுகம் செய்தாலும் வியப்பதற்கில்லை"- ப.சிதம்பரம் ட்வீட்!
File Photo

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யாவை முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்து பேசினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம், “நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மூன்று குற்றவியல் மசோதாக்கள் இந்தியில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, இந்தியில் பெயர் வைப்பது கூடாது என்று சொல்லவில்லை ஆங்கிலத்தில் சொல்லும் பொழுது ஆங்கில பெயர் வைக்க வேண்டும் ஹிந்தியில் சொல்லும் பொழுது இந்தி பெயர் வைக்க வேண்டும். இந்த சட்டங்கள் எல்லாம் ஆங்கிலத்தில் தான் வரைவு சட்டம் தயாரிக்கிறார்கள், உதாரணமாக ஒன்றிய அரசின் சட்ட அமைச்சகத்தில் இந்த சட்டத்தின் பிரிவுகளை எழுதும் போது ஆங்கிலத்தில் தான் எழுதுகிறார்கள். ஆங்கிலத்தில் எழுதி பிறகு இந்தியில் மொழிபெயர்க்கிறார்கள், நீதிமன்றத்தில் ஆங்கில வடிவம் தான் பெரும் பகுதி பயன்படுத்தப்படுகிறது. இந்தி மொழிபெயர்ப்பை யாராவது எடுத்துச் சொன்னார்கள் என்றால் இதற்கு ஆங்கிலத்தில் என்ன சொல்? ஆங்கிலத்தில் என்ன பிரிவு? என்று நீதிபதியே கேட்கிறார்கள். ஆகவே ஆங்கிலத்தில் இருப்பது தான் அனைவருக்கும் பழக்கமானது.

BJP failed to field Muslim candidates, victory is debatable: P Chidambaram  on UP elections

நான் இந்தியில் பெயர் வைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆங்கில மொழி சட்டத்திற்கு வரைவு ஆங்கில பெயர் வைக்க வேண்டும். அதை இந்தியில் மொழிபெயர்க்க வேண்டும் என்றால் இந்தியில் மொழிபெயர்த்துக் கொள்ளுங்கள். இவர்கள் ஆங்கிலத்தில் சட்டத்தை எழுதி விட்டு பெயர் மட்டும் இந்தியில் வைக்கிறார்கள். அது வாயிலேயே நுழையவில்லை. திமுகவின் உண்ணாவிரத போராட்டம் சாத்தியம், நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்று கேட்பது நியாயம் தான். நானும் பலமுறை சொல்லி தான் இருக்கிறேன், நீட் தேர்வு ஏன் தமிழ்நாட்டிற்கு கூடாது என்று பல காரணங்கள் சொல்லி உள்ளேன் ஆனால் ஒன்றிய அரசு அசைந்து கொடுப்பதை போல் தெரியவில்லை.

வருமான வரி தாக்கல் கடந்தாண்டை விட தற்பொழுது கூடுதலாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு இதில் ஏதும் வியப்பு இல்லை, வரக்கூடிய 2033ல் இருப்பதைவிட 2043 வருமான வரி தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை கூடுதலாக தான் இருக்கும். பொருளாதாரம் உயராத ஆண்டு எந்த ஆண்டு? சுதந்திரத்திற்கு பிறகு எந்த ஆண்டு பொருளாதாரம் உயரவில்லை. இரண்டு சதவீதம் 3%, 4% என பொருளாதாரம் உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. ஆண்டு ஒன்று போனால் வயது ஒன்று கூடுவதைப் போல் பொருளாதாரமும் உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது” என்று தெரிவித்தார்.

MUST READ