spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவிறுவிறுப்பாக நடைபெற்று வரும் பாலமேடு ஜல்லிக்கட்டு!

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பாலமேடு ஜல்லிக்கட்டு!

-

- Advertisement -

 

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பாலமேடு ஜல்லிக்கட்டு!

we-r-hiring

உலகப்புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்றில் மஞ்சள் நிற சீருடை அணிந்து 50 வீரர்கள் களம் காணுகின்றனர். அதேபோல், ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் சுற்றுக்கான காளைகள் களம் கண்டு வருகின்றன.

சலார் படத்தை கைப்பற்றிய நெட்ஃப்ளிக்ஸ்….. ஓடிடி ரிலீஸ் எப்போது?

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பெறும் வீரருக்கு நிசான் கார் பரிசாக வழங்கப்படவிருக்கிறது. சிறப்பாக களம் காணும் காளைக்கும் நிசான் கார் முதல் பரிசாக வழங்கப்படுகிறது. அதேபோல், பாலமேடு ஜல்லிக்கட்டில் இரண்டாம் இடம் பிடிக்கும் வீரருக்கு Apache பைக் பரிசாக வழங்கப்படுகிறது. சிறந்த களம் காணும் காளைக்கு இரண்டாவது பரிசாக கன்றுடன் கூடிய காங்கேயம் நாட்டுப் பசு வழங்கப்படவுள்ளது.

தெலுங்கில் பட்டையை கிளப்பும் குண்டூர் காரம்… வசூல் வேட்டை…

ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் 1,000- க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், காயமடையும் மாடுபிடி வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக, ஆம்புலன்ஸ் உடன் கூடிய மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கனோர் பாலமேடு ஜல்லிக்கட்டு நேரில் கண்டு ரசித்து வருகின்றனர்.

MUST READ