spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதென்காசி துரித உணவுக் கடையில் ப்ரைட் ரைஸ், நூடுல்ஸ் சாப்பிட்டோர்க்கு வயிறு போக்கு - மருத்துவமனையில்...

தென்காசி துரித உணவுக் கடையில் ப்ரைட் ரைஸ், நூடுல்ஸ் சாப்பிட்டோர்க்கு வயிறு போக்கு – மருத்துவமனையில் அனுமதி

-

- Advertisement -

தென்காசி துரித உணவுக் கடையில் ப்ரைட் ரைஸ், நூடுல்ஸ் சாப்பிட்டோர்க்கு வயிறு போக்கு - மருத்துவமனையில் அனுமதிதென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் துரித உணவுக் கடையில் ப்ரைட் ரைஸ் நூடுல்ஸ் சாப்பிட்ட 10க்கும் மேற்பட்டோர் வயிறு போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதி.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் – அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில் உள்ள துரித உணவுக்கடையில் ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதி மக்கள் ப்ரைட் ரைஸ் நூடுல்ஸ் வாங்கிச் சென்று சாப்பிட்டு உள்ளனர்.

கோவையில் கல்லூரி மாணவன் “சூப்பர் பவர்” இருப்பதாக கூறி சாகசம் – தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

we-r-hiring

அதன் பின்னர் காலையில் வயிறு உபாதை காரணமாக அவதிப்பட்ட நிலையில் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் தற்போது 10க்கும்  மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் சுகாதாரத் துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் துரித உணவகத்தை ஆய்வு செய்து மாதிரிகளை எடுத்துச் சென்றனர். மேலும் ஆய்வக பரிசோதனை முடிவுகள் வரும் வரை கடையைத் திறக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

சுகாதாரத்துறை அதிகாரிகள் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துரித உணவகத்தில் உணவு வாங்கி உட்கொண்ட 10க்கும்  மேற்பட்டோர் தற்போது அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வரும் நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ