முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17–ஆம் தேதி சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு அறிவித்துள்ளார்.
அன்றைய நாள், அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந் நிலையில் நாளை பெரியாரின் பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் சமூக நீதி நாள் உறுதிமொழி இன்று ஏற்கப்பட்டது.
இந்த நிகழ்வில், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் , ”தந்தை பெரியாரின் பிறந்த நாளை ‘சமூக நீதி நாள்’ என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள்.
நாளைய தினம் பெரியாரின் பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் உள்ள இராணுவ அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் இன்று பங்கேற்றோம். சமத்துவம் – சகோதரத்துவம் தழைக்க சக அமைச்சர் பெருமக்களுடன் இணைந்து சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்றோம். சமூக நீதி போற்றுவோம்! என பதிவிட்டுள்ளார்.