Homeசெய்திகள்தமிழ்நாடு7 மாதங்களுக்கு பிறகு குமரி திருவள்ளுவர் சிலையை பார்வையிட அனுமதி

7 மாதங்களுக்கு பிறகு குமரி திருவள்ளுவர் சிலையை பார்வையிட அனுமதி

-

7 மாதங்களுக்கு பிறகு குமரி திருவள்ளுவர் சிலையை பார்வையிட அனுமதி

உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமாக குமரியின் ஒரு அடையாளமாக திகழ்ந்து வருவது குமரி கடல் நடுவே அமைந்துள்ள 133 அடி உயரமுடைய தமிழ் புலவர் அயன் திருவள்ளுவர் சிலை.

kanyakumari vivekananda rock

இதனை தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர், 2000 ம் ஆண்டு குமரி கடல் நடுவே நிறுவினார். இவ்வாறு பிரம்மாண்டமாக இருந்து வரும் அயன் திருவள்ளுவர் சிலையை சுற்றுலா படகில் சென்று கண்டு ரசிப்பதற்காக உள்ளூர் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் தினந்தோறும் குமரிக்கு வருகை தருவார்கள். அதிலும் குறிப்பாக அதிகாலை சூரியன் திருவள்ளுவர் சிலை அருகே கடலில் இருந்து உதயமாகி வரும் இயற்கை காட்சியை சுற்றுலா பயணிகள் பரவசத்துடன் கண்டு ரசிப்பார்கள்.

இதனிடையே கடலின் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை கடல் உப்பு காற்றில் இருந்து பாதுகாப்பதற்காக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூச்சு நடைப்பெறும். அந்த வகையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், உத்தரவுப்படி கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரசாயன கலவை பூச்சு பணிகள் ஆரம்பித்தது. இதில் திருவள்ளுவர் சிலைக்கு இரும்பு கம்பிகளால் சாரங்கள் அமைக்கப்பட்டு காகித கூழ் என பல்வேறு கட்டங்களாக ரசாயன கலவை பூச்சும் பணிகள் வேகமாக நடைப்பெற்று வந்தது. இந்த பணிகளானது தற்பொழுது முழுமையாக முடிவடைந்து 133 அடி உயரமுடைய அயன் திருவள்ளுவர் சிலை புது பொழிவுடன் கம்பீரமாக கடல் நடுவே காட்சி அளித்து வருகிறார்.

இதனையடுத்து திருவள்ளுவர் சிலையை சுற்றுலா படகில் சென்று பார்வையிட ஏழு மாதங்களாக விதிக்கப்பட்டு இருந்த தடையும் இன்று முதல் நீக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு இன்று காலை முதல் சுற்றுலா படகு சேவை துவங்கியது.

MUST READ