spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஎஸ்.வி.சேகரின் மனுவைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

எஸ்.வி.சேகரின் மனுவைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

-

- Advertisement -

 

பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!
File Photo

 

we-r-hiring

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சைப் பேச்சுத் தொடர்பான வழக்கை ரத்துச் செய்யக்கோரி, நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான எஸ்.வி.சேகரின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நிலவில் தரையிறங்கும் இடத்தைப் படம் பிடித்த லேண்டர்!

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான எஸ்.வி.சேகர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்துச் செய்யக்கோரிய எஸ்.வி.சேகரின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், ஒரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், இது போன்ற செயல்களில் ஏன் ஈடுபடுகிறார் என்று கேள்வி எழுப்பியதுடன், மின்னணு ஊடகங்களில் செயல்படும் போது, அதிக கவனம் தேவை என்று அறிவுரை வழங்கினர்.

ஆன்மீக பயணத்திற்கு நடுவே முக்கிய பிரமுகர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்!

இதன் பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், வழக்கு விசாரணை கீழமை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெறும் எனக்கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

MUST READ