
சந்திரயான்- 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த லேண்டர் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ. நிலவில் தரையிறங்கும் இடத்தை சந்திரயான்- 3 விண்கலத்தின் லேண்டர் படம் பிடித்துள்ளது. லேண்டரில் பொருத்தப்பட்ட கேமராவால் ஆகஸ்ட் 15, 17 ஆகிய தேதிகளில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
அனைத்து கல்வி நிலையங்களிலும் வெறுப்பு அரசியல் தொடர்பாக ஒரு நபர் ஆணையம் – திருமாவளவன் கோரிக்கை
உந்துவிசை கலனில் இருந்து பிரிந்த லேண்டர் எடுத்த புகைப்படத்தை தற்போது இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவை நோக்கிச் செல்லும் விக்ரம் லேண்டரில் உள்ள கேமராவில் எடுக்கப்பட்ட புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.
90வது பிறந்த நாள் – முரசொலி மாறன் சிலைக்கு தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை
இதனிடையே, சந்திரயான் லேண்டர் நிலவை சுற்றி வரும் பாதையின் உயரம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிலவில் இருந்து குறைந்தபட்சமாக 137 கி.மீ. தூரத்திலும், அதிகபட்சமாக 157 கி.மீ. தூரத்திலும் லேண்டர் பயணித்து வருகிறது. நிலவை நோக்கிப் பயணிக்கும் லேண்டரின் நிலை சீராக உள்ளது. நிலவின் சுற்று வட்டப்பாதையில் உள்ள லேண்டரின் உயரம் 113*157 கி.மீ. வரை குறைக்கப்பட்டுள்ளது.