Homeசெய்திகள்தமிழ்நாடுநீட் தேர்வு மசோதாவுக்கு மீண்டும் அவகாசம் கோரினால் மனுவை தள்ளுபடி செய்ய நேரிடும்-உச்சநீதிமன்றம்

நீட் தேர்வு மசோதாவுக்கு மீண்டும் அவகாசம் கோரினால் மனுவை தள்ளுபடி செய்ய நேரிடும்-உச்சநீதிமன்றம்

-

நீட் தேர்வை கட்டாயமாக்கி கடந்த 2017, 2018ம் ஆண்டில் இந்திய மருத்துவ கவுன்சிலின் சட்ட திருத்தத்துக்கு எதிராக, தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அஜய் ரஸ்தோஹி அமர்வில் விசாரணை நடத்தியது. அதில் கலந்து கொண்ட தமிழக அரசு தரப்பினர் வழக்கை ஒத்தி வைக்க கோரினர்.

நீட் தேர்வு தொடர்பான, மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு நெடுநாள் கிடப்பில் உள்ளது என்பதன் மூலம் நீட் தேர்வு சட்டத்திற்கு எதிராக கேள்வி எழுப்பக்கூடாது என்பதையே காட்டுகிறது.

நீட் தேர்வு தொடர்பான மசோதா குடியரசுத் தலைவர் தரப்பில் நிலுவையில் இருப்பதை பார்த்தும் கூட, மசோதாவின் அடிப்படை தன்மை குறித்து கேள்வி எழுப்ப கூடாது என்பது உங்களுக்கு புரியவில்லையா?

ஆளுநர், குடியரசுத் தலைவரை காட்டி மீண்டும் அவகாசம் கோரினால், உச்சநீதிமன்றம் இதில் தலையிட முடியாது என்றும் மீறி இப்போன்று நடந்தால், மனுவை தள்ளுபடி செய்ய நேரிடும் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கைவிடுத்தது.

நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழக அரசின் மனு மீதான விசாரணையை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

MUST READ