spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது

-

- Advertisement -

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று ( மே 6 ) காலை 9.30 மணியளவில் தேர்வு முடிவுகள் dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது
பிளஸ் 2 மாணவர்களுக்கு கடந்த மார்ச் 1 ஆம் தேதி பொதுத் தேர்வு தொடங்கி 22 ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்ற நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 7.8 லட்சம் மாணவ மாணவிகள் இந்த தேர்வை எழுதினர்.

we-r-hiring

இந்த ஆண்டும் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுத் தேர்வு இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது

பிளஸ் 2 பொது தேர்வில் 94.56%  மாணவ மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.44%, மாணவர்கள் 92% தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி விதிகம் 91.32%.

அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.49 சதவிமாகவும், தனியார் பள்ளிகள் 96.7 சதவிமாகவும், இருபாலர் பள்ளிகள் 94.7 சதவிமாகவும், பெண்கள் பள்ளிகள் 96.39 சதவிமாகவும், ஆண்கள் பள்ளிகள் 86.96 சதவிமாக உள்ளது. 2478 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 397 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

இத்தேர்வு முடிவுகள் மாணவர்களின் வாழ்க்கையை மதிப்பீடு செய்வதற்கானது அல்ல! கற்றலை அளவீடு செய்வதற்கான தேர்வு முடிவுகள் மட்டுமே என்பதை மாணவச் செல்வங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

MUST READ