Homeசெய்திகள்தமிழ்நாடுதோல்வி பயத்தில் பிளஸ் 2 மாணவி தற்கொலை

தோல்வி பயத்தில் பிளஸ் 2 மாணவி தற்கொலை

-

தோல்வி பயத்தில் பிளஸ் 2 மாணவி தற்கொலை

முசிறியில் பிளஸ்- 2 தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

தந்தை இறந்த சோகத்தில் மகள் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம், முசிறி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். இவரது மகள் வர்ஷா (20) கடந்த 2020-ம் ஆண்டு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த இவர் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். இந்தநிலையில் இந்த ஆண்டு வர்ஷா தனது வீட்டில் இருந்தபடியே பிளஸ்-2 தேர்விற்கு படித்து தனித்தேர்வராக பொதுத்தேர்வு எழுதியுள்ளார். தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வீட்டிலிருந்த மாணவி வர்ஷாவிற்கு தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மாணவி கடந்த 4-ம்தேதி வீட்டில் எலி பேஸ்ட் விஷத்தை தின்ற நிலையில் மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து வர்ஷாவை அவரது பெற்றோர்கள் திருச்சியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி மாணவி வர்ஷா நேற்று இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து பாலசுப்ரமணியன் முசிறி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ