சென்னையிலிருந்து மதுரை நோக்கி தமிழைத் தேடி பரப்புரை பயணம் செய்வது எனக்கே வெட்கமாக உள்ளது என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில், தமிழைத் தேடி எனும் விழிப்புணர்வு பரப்புரை நிகழ்வை அவர் தொடங்கி வைத்தார். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தொடங்கி வைத்த இந்நிகழ்வின் போது, பாவேந்தர் பாரதிதாசன் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக பிரபல பாடகர்கள் சீர்காழி சிவசுப்பிரமணியன் மற்றும் புஷ்பவனம் குப்புசாமி ஆகியோர் பாடினர்.

தமிழைத் தேடி விழிப்புணர்வு பயணத்தில் பேசிய ராமதாஸ், “சென்னையிலிருந்து மதுரை நோக்கி தமிழைத் தேடி பரப்புரை பயணம் செய்வது எனக்கே வெட்கமாக உள்ளது. முழுமையாக கூட ஆங்கிலத்தில் பேசுங்கள். ஆனால் தமிழ் பேசும்போது பிறமொழி கலந்து பேசாதீர்கள். நான் இன்று பிறமொழி கலந்து மூன்று முறை பேசி தவறு செய்துள்ளேன். அதற்கு நானே ரூ.1,000 அபராதம் விதித்து கொண்டேன்” எனக் கூறினார்
