Homeசெய்திகள்தமிழ்நாடுகாவல்துறை உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

காவல்துறை உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

-

- Advertisement -

 

சென்னைக்கு புதிய மாவட்ட ஆட்சியர் நியமனம்!
Photo: TN Govt

ஐந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்பட 16 காவல்துறை உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுள்ளனர்.

‘என்கவுன்ட்டரில் இரண்டு ரவுடிகள் கொலை’!

தமிழக உள்துறைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சுரேஷ் குமார், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய பிரபாகர் கரூர் மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வுத் துறைக் கண்காணிப்பாளராக இருந்த ஜெயக்குமார், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் கடலோர பாதுகாப்புக் குழும காவல் கண்காணிப்பாளராக ஹரி கிரண் பிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மூன்று கிராமங்களில் கிரானைட் குவாரிகள் அமைக்க ஒப்பந்தம் வெளியீடு!

சென்னை குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த மகேஸ்வரி, நெல்லை மாவட்ட காவல் ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட தீபா சத்யன், சென்னை நிர்வாக உதவி ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

MUST READ