
காமராஜர், எம்.ஜி.ஆர். உள்ளிட்டத் தலைவர்கள் நடிகர் விஜய்யை அரசியலுக்கு அழைப்பது போல மதுரையில் அவரது ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

‘லியோ’ படத்தின் திரிஷா ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, நடிகர் விஜய் அரசியலில் களமிறங்குவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இதனால் நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கும் வகையில், மதுரையில் அவரது ரசிகர்கள், ஆங்காங்கே போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். அந்த வகையில், தலைவர்களுடன் நடிகர் விஜய் நடந்து வருவது போல, தற்போது போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
பிரித்விராஜ், மோகன்லால் கூட்டணியின் லூசிபர் 2…. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!
அந்த போஸ்டரில், “தம்பி பொறுத்தது போதும் வா தமிழ்நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்க நாங்கள் அமர்ந்திருந்த அரியாசனம் உனக்காகக் காத்திருக்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.