Homeசெய்திகள்தமிழ்நாடுபொங்கல் பரிசு டோக்கன் இன்று முதல் விநியோகம்

பொங்கல் பரிசு டோக்கன் இன்று முதல் விநியோகம்

-

- Advertisement -

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு டோக்கன் இன்று முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

we-r-hiring

பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டிலும் பொங்கல் பண்டிகையை மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு, ரூ.1000 ரொக்கம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

அதன்படி வருகிற 9-ந் தேதி பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அன்றே அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்காக அனைவருக்கும் வீடுகளுக்கு சென்று இன்று முதல் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. வருகிற 8-ம் தேதி வரை டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டோக்கனில் பரிசு தொகுப்பு வழங்கும் நாள், வழங்கப்படும் நேரம் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கும். அந்த நேரத்தில் சென்று பொங்கல் தொகுப்பினை பெற்று கொள்ளலாம்.

பொங்கல் தொகுப்பில் ஏதாவது குறைகள் இருந்தால் அது குறித்து புகார் தெரிவிக்க எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பொங்கல் தொகுப்பு பெற்றவுடன் அதுகுறித்த குறுஞ்செய்தி குடும்ப அட்டைதாரர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

MUST READ