
மேலும் ஒரு பட்டமளிப்பு விழாவை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார்.

‘இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் பீகார் அரசு’- ராமதாஸ் வரவேற்பு!
இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க தமிழக அரசு பரிந்துரைச் செய்தது. இதனையேற்று, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஒப்புதலுக்காக கோப்புகளை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பியிருந்தார்.
ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணித்திருந்தார். பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் அமைச்சர் பொன்முடி பெயர் இடம் பெற்றிருந்தபோதும், அவர் பங்கேற்கவில்லை.
அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..
இந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் இன்று (நவ.08) நடைபெறவுள்ள தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்கவுள்ள நிலையில், அமைச்சர் பொன்முடி புறக்கணித்துள்ளார்.


