பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடியை கலாய்த்து பேசியுள்ளார். இதற்கு முன்னரே பலமுறை மோடியை விமர்சனம் செய்துள்ளார் பிரகாஷ்ராஜ். இந்நிலையில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார் பிரகாஷ்ராஜ். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவாக இந்தப் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ் கலைஞர் கருணாநிதியுடனான தன்னுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அதைத்தொடர்ந்து பிரதமர் மோடியைப் பற்றி பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். பிரதமர் மோடி கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்தில் மூன்று நாட்கள் தியானம் செய்யப் போகிறார் என்ற செய்தி வெளிவந்த நாள் முதலே பல்வேறு மாநிலங்களில் இந்நிகழ்வு பேசு பொருளாகியது.
இதை பற்றிய பத்திரிக்கையாளரின் கேள்விக்கு பதில் அளித்த பிரகாஷ்ராஜ் “பொதுவாக ஷூட்டிங் நடைபெறும் பொழுது அதைக் காண ரசிகர்கள் கூடுவார்கள், ஆனால் பிரதமர் மோடியோ அவரே பார்வையாளர்களையும் கூட்டிக்கொண்டார்” என்று கலாய்க்கும் விதமாக பதில் அளித்துள்ளார். அவரின் இந்த நக்கலான பதிலால் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது. அதை தொடர்ந்து பேசிய பிரகாஷ்ராஜ், “தமிழ்நாட்டில் பாஜகவை மக்களே அனுப்பி விட்டார்கள். வட மாநிலத்திலும் பாஜக தோல்வியடையும் என்று நம்புகிறேன். அதற்கான ஏற்பாடுகளை மோடியே செய்திருக்கிறார்” என்று மோடியை தாக்கி பேசினார் பிரகாஷ்ராஜ். மேலும் தன்னுடைய சினிமா அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
- Advertisement -