
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “வடசென்னையில் உள்ள தொழிற்சாலைகளை ஆய்வுச் செய்ய வேண்டும். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முறையாக ஆய்வு நடத்தியிருந்தால் விபத்து நடந்திருக்காது. எண்ணூரில் எண்ணெய் மற்றும் வாயுக் கசிவால் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கருணாநிதியின் திரை வாழ்க்கை – ஆவணப்படத்தை இயக்கும் பிரபல இயக்குநர்!
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தங்களது பணிகளைப் பொறுப்புடன் செய்ய வேண்டும். வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே எச்சரித்தும் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே சொன்னது. கால்வாய்களை முன்பே தூர்வாரி மோட்டார்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.
பிரபல ஸ்டன்ட் இயக்குனர் ஜாலி பாஸ்டின் காலமானார்
அ.தி.மு.க. ஆட்சியில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. தாமிரபரணி ஆற்றில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திடீரென திறக்கப்பட்டதால் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது. முன்கூட்டியே மக்களை முகாம்களில் தங்க வைத்திருந்தால் உயிரிழப்புகளைத் தடுத்திருக்க முடியும்” எனத் தெரிவித்தார்.