spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபுதுக்கோட்டையில் பரபரப்பு - போதையில் ரகளை செய்த அண்ணனை தீர்த்துக் கட்டிய தம்பி கைது!

புதுக்கோட்டையில் பரபரப்பு – போதையில் ரகளை செய்த அண்ணனை தீர்த்துக் கட்டிய தம்பி கைது!

-

- Advertisement -

ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவன மோசடி- முன்னாள் காவல்துறை அதிகாரி கைது!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே செல்போன் திருடியதாக கூறி போதையில் ரகளை செய்த அண்ணனை பெட்ரோல் ஊத்தி தம்பி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா கரிக்காடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் மகன் முல்லைவேந்தன்(23) . இவர் தினமும் குடித்துவிட்டு போதையில் வந்து அடிதடி தகராறில் ஈடுபட்டு வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன் பைக் விபத்தில் சிக்கிய முல்லைவேந்தன் மனநிலை பாதிக்கப்பட்டதுபோல் இருந்ததுடன் வீட்டில் அனைவரிடமும் தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் ஒரு மாதத்துக்கு முன்பு அவரது செல்போன் மாயமாகியுள்ளது. இதனை அவரது சகோதரான முகிலன் (21) தான் திருடியதாக கூறி தொடர்ந்து அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரை தீர்த்து கட்ட வேண்டும் என முடிவு செய்துள்ளார். அதன்படி கடந்த 7ம் தேதி நண்பர்கள் 2 பேருடன் (17வயது சிறுவன் உட்பட) சேர்ந்து அண்ணனை அழைத்து கொண்டு புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஒடப்பவிடுதி சென்றுள்ளார். அங்கு அனைவரும் மது குடித்த பின்னர் போதையில் இருந்த அண்ணன் முல்லைவேந்தனை கட்டையால் தாக்கி, கத்தியால் குத்தியுள்ளத்தில் இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். பின்னர் மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை எடுத்து விறகுக்கட்டையை வைத்து அவரை எரித்துவிட்டு தப்பினோம். என அவர்கள் இவ்வாறு போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து போலீசார் 3 பேரையும் இலுப்பூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி முகிலன், அனீஷ்வரனை புதுக்கோட்டை சிறையிலும், 17வயது சிறுவனை திருச்சி சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

MUST READ