கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனை அடுத்து, 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், புதுச்சேரியில் அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.